மறைந்து கொண்டிருக்கும் கந்தரோடைத் தொல்லியல்
தமிழ் மக்கள் மத்தியில் தமது பண் பாட்டுத் தொடர்சியைக் குறித்த மையத்தில் நிலை நிறுத்துவதற்கு வேண்டப்பட்ட மன உணர்வு உருவாக்கப்படுவதற்கும் வாய்ப்பில்லாதொழிந்தது. இவ்வாறான ஒரு பின்னணி யே இன்று ‘கிழக்காக மாயக்கை நீரேந்து பரப்பும் மக்கள் வாழ்வின் புராதன இரு மையங்களாக இருந்து வந்நதிருக்கின்றன.
வழுக்கையாற்றுப் வடிநிலத்தினூடாக உள்வாங்கப்பட்ட பண்பாட்டுப் பங்களிப்புப் பற்றிய ஆய்வுகளில் ஆய்வாளர்கள் இன்னும் அக்கறை செலுத்தவில்லை. இருந்தாலும் கந்தரோடையி லிருந்தும் இதுவரையில் வெளிக்கொணரப்பட்ட தொல்லியல் எச்சங்கள் அத்துறை ஆய்வுகளில் முக்கியத்துவத்தை கோடிட்டுக்காட்டி நிற்கின்றன எனலாம். ஜீவனோபாயத்திற்கான உயிரோட்டமான மையங்களாக இயற்கையாக அமைந்த நன்னீர் நிலைகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம்தொட்டே இருந்து வந்திருக்கின்றன. தொல்லியல் ஆய்வுகள் மூலம் பெறப்படுகின்ற சான்றுகள் இக்கருத்தினை உறுதிப் படுத்தியுள்ளன. அவ்வகையில் ‘மயோசின்” காலப்பகுதியில் உருவான யாழ்ப்பாண தீபகற்ப புவியமைப்பியலுடன் இணைந்த தோற்றம் பெற்ற வழுக்கையாற்றுப்பள்ளத் தாக்கின் இருமருங்கிலும் கோயிற்குடியிருப்புகளும், விவசாயக் குடியிருப்புகளும் தொடர்ச்சியான வளர்ச்சியோடு பண்பாட்டுக் கோலங்களை வெளிப்படுத்தியிருந்தன என்றால் அது மிகையாகாது. இக்குடிய
pருப்புக்கள் ஒரே சீராக இப்பள்ளத்தாக்கின் இருமருங்கிலும் வளர்சிசி பெற்றிருக்கவில்லை. சிலபகுதிகள் நகரரீதியாக வளர்ச்சியடை ந்திருந்தன. பெரும்பாலான குடியிருப்புக்கள் விவசாயக் கிராமியக் குடியிருப்புக்களாகவே இருந்திருக்கின்றன. கந்தரோடை அவ்வகையில் ஒரு நகரக்குடியிருப்பாகவும் வர்த்தக மையமாகவும் வளர்ச்சி பெற்றிருந்தமையை அங்கிருந்து பெற்றுக்கொள்ளப்படும் தொல் லியல் சான்றுகள் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது. கந்தரோடை தொடர்பான ஆய்வின் பின்னணியிலே வழுக்கiயாற்றுப்பள்ளத் தாக்கினுடைய தொல்லியல் முக்கிய த்துவம் எதிர்காலத்தில் இன்றியமையாததாக ஆராயப்பட வேணடியதொன்றாகும். ஏனெனில் யாழ்ப்பாணத்தின் சமூக உருவாக்கம் பற்றிகற்போருக்கும்,ஆய்வு செய்வோரு க்கும் வழுக்கையாற்றுப் பள்ளத்தாக்கு வளமான சான்று வழங்கும் ஒரு மையமாக அமையும் என்பது அண்மைக்கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
வழுக்கையாற்றுப் பள்ளத்தாக்குடன் இணைந்த வகையில் பல வணிக மையங்களும் தானியக்களஞ்சியங்களும், ஆலயங்களும் காணப்பட்டிருந்தன என்பதனை அண்மைக் காலத் தொல்லியல் மேலாய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. சதுர முறையிலும் காணப்படும் இந்நாணயங்களின் முற்பக்கத்தில் சூரிய உருவமும் அல்லது வண்டிற் சில்லு ஒன்றிலே விலங்கு ஒன்று இழுத்துச்செல்வது போன்ற உருவமும் காணப்படு வதனை அவதானிக்கலாம். ஒரு நாணயத்தில் சூரிய உருவம் மிகத்தெளிவாக தெரிகி ன்றது. அதில் சூரிய உருவத்தினை நோக்கி ஒரு விலங்கு வருவது போன்று அமைந்துள்ளது. இத்தகைய உருவங்களை தாங்கி, வெளியிடப்பட்ட இவ்வகையான நாணயங்களை வடகிழக்கிந்தியாவிலிருந்தும் தக்கண தென்னிந்தியப்பரப்பிலிருந்தும் ஆய்வாளர் பெற்றுள்ளனர். இருப்பினும் கந்தரோடையிலிருந்து கிடைத்தவற்றுள் நான்கு நாகவடிவம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்களாக இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்க தாகும். இந்த வெள்ளிநாணயம் நாகவம்சத்தின் வெளியீடாகவே கொள்ளவேண்டிய ஒருநிலை எமக்கு ஏற்பட்டிருக்கிறது. நாகதீபத்தில் அரசாட்சி செய்த நாகதீப ராஜாவினுடைய வெளியீடுகளாக நாகசின்னம் பொறித்த இந்த வெள்ளிநாணயத்தினைக் கொள்வதில் தவறேதும் இருக்கமுடியாது என்றே கருதவேண்டியுள்ளது. கந்தரோடையிற் கிடைத்துள்ள இவ்வெள்ளி நாணயங்கள் தொடர்பான விபரணநோக்கு இவ் அத்தியாயத்தின் இறுதிப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
வழுக்கையாறு தந்த வரலாற்று மூலங்களுள் எமக்கு தற்பொழுது சிறப்பாக கிடை த்திருப்பது தமிழ்பிராமிச் சாசனங்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டத் துண்டுகளாகும். தமிழ் பிராமி வரிவடிவங்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள் பல்வேறு வகையைச் சேர்ந்த னவாக காணப்படுகின்றன. கறுப்பு, சிவப்பு மட்பாண்டச்சட்டிகள் (டீழறடள) இவற்றுள் மிகமிகப் பிரதானமானவையாகும். சிவப்பு வர்ணத்திலான பெரிய மண் பானைகளிலும் பிராமி வரிவடிவங்கள் பொறிககப்பட்டுக் கிடைத்துள்ளன. இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் விளைவாகக் கிடைத்த பிராமி வடிவங்களுள் ‘குணி” என்ற தமிழ் வாசகம் பொறிக்கப்பட்டுக் கிடைத்த மட்பாண்டத் துண்டு ஒன்று வரலாற்று முக்கியத்துவத்தினை வெளிப்படுத்துவதாக அமைகிறது. இவ் வாசகத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட பிராமி வரிவடிவம் தமிழ் நாட்டில் உள்ள புகலூர் தமிழ் பிராமிச்சாசன வரிவடிவினை ஒத்தமுறையில காணப்படுவது விசேடமாக நோக்க த்தக்கதாகும். வரிவடிவினையிட்டு எவருமே அதனை தமிழ்ப்பிராமி அல்ல என்று மறுக்க முடியாது. அத்தோடு இம் மட்பாண்டச் சாசனத்துடன் இணைந்த வகையில் கிடைத்த வேறு மட்பாணடங்களில் தமிழ் நெடுங்கணக்கிற்கே சிறப்பெழுத
No comments:
Post a Comment