இலங்கையில் சோழர் ஆட்சியும் இந்து ஆலய வளர்ச்சியும்.
பழந்தமிழ் நூல்கள் எழுந்த காலத்திலேயே சோழர்கள் பற்றிய குறிப்புக்கள் பாடல்களில் வருகின்றன. நளன்கிள்ளி, நெடுங்கிள்ளி, கோர்ச்செங்கணான் முதலான சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் புறநானூறு முதலான செய்யுள்களில் காணப்படுகின்றன. முத்தரையர்கள் என்னும் குறுநில மன்னர்களின்
ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தஞ்சையை மீட்டு தரணியை ஆண்ட பெருமை விஜயாலய சோழனையே சாரும். முதலாம் இராஜராஜசோழன்இ அவன் மகன் இராஜேந்திரசோழன் ஆகியோரது ஆட்சியிலே சோழராட்சி எட்டுத்திக்கிலும் பரவி விரிந்து நானிலம் போற்றும் பெருமை பெற்றது. தென்னிந்தியா மட்டுமன்றி அருகிலுள்ள இராச்சியங்கள் எல்லாவற்றையும் கைப்பற்றியதோடு கடல் கடந்து கடாரம் வென்று யாவாஇ மலாயாஇ ஒரிசாஇ மாலைதீவுஇ லட்சதீவுஇ ஈழம் போன்றவற்றிலும் வெற்றிக்கொடி நாட்டி பாரிய ஆதிக்க விஸ்தரிப்புக்களை ஏற்படுத்தி உலகம் போற்றும் உன்னதமானவர்களாக வரலாற்;றில் பேசப்படுபவர்களாக சோழர்கள் விளங்குகின்றார்கள். இலங்கை மீது படையெடுத்து வந்து தமிழர் சிறப்புக் கூற ஆட்சியமைத்தும் இந்து சமயம் தழைத்தோங்க கோயிலமைத்தும் அன்றும்இ இன்றும்இ என்றும் தமிழர் தம் புகழ் கூறும் வரலாறு;றுத் தடயங்களை இல்கையில் விட்டுச் சென்ற பெருமை சோழர்களையே சாரும்.
முதலாம் இராஜராஜசோழன் (கி.பி 985-1016)இ முதலாம் இராஜேந்திரன் (கி.பி 1012-1044) ஆகியோரின் ஆட்சியில் தமிழகத்தைப் போலவே ஈழத்திலம் அரசியல்இ சமூக சமய வளர்ச்சிகள் மேலோங்கி இருந்தன. இவர்களுடைய ஆட்சியில் இலங்கையில் இந்த சமயம் சிறப்பிடம் பெற்றது. தங்களுடைய ஆட்சியின் கீழமைந்த பிரதேசங்களில் இந்து சமயத்தை வளர்க்க மிகுந்த பிரயத்தனங்களில் ஈடுபட்டனர். தாம் கைப்பற்றி இருந்த இலங்கையின் பகுதியினை ஈழமான மும்முடிச்சோழ மண்டலம் என சோழர் குறிப்பிட்டிருந்தனர். இராஜராஜனின் ஆட்சியில் ஈழமான மும்முடிச்சோழ மண்டலம் வளநாடு என்ற பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றிலே நிர்வாகப் பொறுப்புக்களை மேற்கொண்டிருந்த சோழப்பிரதானிகளும் வணிகரும் படையாரும் கோயில்களை அமைத்து நிவந்தங்களை வழங்கி சமயம் வளர்த்தனர்.
சோழர்கள் இலங்கையில் தாம் கைப்பற்றிய பகுதிகளிலே இந்த சமயத்தை வளர்ப்பதற்காக பல கோவில்களை அமைத்தனர். அக் கோயில்கள் இன்றல்ல என்றும் சோழர்கால சிறப்புக் கூறும் என்றால் மிகையாகாது. சோழராட்சியில் ஈழத்தில் ஆலயவளர்ச்சியால் இந்து சமயம் தழைத்தோங்கியது. ஆலயங்கள் கட்டப்பட்டதோடு அவற்றிற்கு நிவந்தங்கள் வழங்கப்பட்டன. நாள்தோறும் பூசை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. சோழராட்சியிலே அருண்மொழித்தேவ வளநாடு என்று வழங்கப்ட்ட மாதோட்டமான இராஜராஜபுரத்தில் இராஜராஜ ஈஸ்வரம்இ திருவாமீஸ்வரம் என்னும் இருகோயில்கள் அக்காலத்தில் அமைக்ப்பட்டன. இலங்கையில் இருந்த சோழப்பிரதானிகளுள் ஒருவனான சோழமண்டலத்து ஷத்திரிய சிகாமணி வளநாட்டு வேளார் நாட்டுச் சிறுகூற்ற நல்லூர்க் கிழவன் தாழிக்குமரன் என்பனால் இராஜராஜ ஈஸ்வரம் அமைக்கப்பட்டது. அதற்கு இறையிலி தேவதானமாக மாதோட்டத்pதல் நிலம் வழங்கப்பட்டது. அத்தோடு அரசாங்த்தின் வருமானமும் கோயிலுக்கு நிவந்தமாக வழங்கப்பட்டது. அத்துடன் வைகாசி விசாகம் ஏழு நாளும் விழா எடுத்து தீர்த்தம் ஆட்டுவிக்க வேண்டும் எனவும் தாழிக்குமரன் அறக்கட்டளை ஏற்படுத்தியிருந்தான். இவற்றைக் கூறுகின்ற சாசனம் திருக்கேதீஸ்வரத்தில் காணப்படுகின்றது. திருவாமீஸ்வரம் என்னும் இரண்டாவது கோயிலில் இராஜேந்திர சோழனின் பெருந்தனத்துப் பணிமகன் சிறுகுளத்தூருடையான் தேவன் சந்தி விளக்கெரிப்பதற்கு ஏற்பாடுகளை செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
உத்தம சோழ ஈஸ்வரம் என்னும் சிவாலயத்தைப்பற்றி வடமத்திய மாகாணத்துக் கடவக்கோறளையிலுள்ள ஆதகட எனனும் என்னும் ஊரில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டினால் அறியமுடிகின்றது. இக்கோயிலை 11 ஆம் நூற்றாண்டில் இலங்கையிலிருந்த தமிழ்ப்பிரதானிகள் அமைத்தனர். அரங்கன் இராமேசன் என்பான் இந்தக் கோயிலுக்கு ஒரு வேலி நிலமும் நந்தா விளக்கேற்ற 20 பசுக்களையும் வழங்கினான் என்று கூறப்படுகிறது. மண்டலகிரியான நித்தவினோத புரத்தில் பண்டித சோழ ஈஸ்வரம் என்னும் சிவாலயம் ஒன்று இருந்ததாக இராஜேந்திரன் சோழன் காலத்து சாசனம் மூலமாக அறியமுடிகிறது.
சோழராட்சியில் புலத்திநகரமான பொலநறுவை ஜனநாத மங்களம் என்னும் புனர்நாமம் பெற்றுத் தலைமை நிர்வாக நிலையமாக விளங்கியது. அங்கு இந்து கலாசாரத்தின் செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவிலே ஏற்பட்டது. தென்னிந்தியாவில் இருந்து வந்த நிர்வாக அதிகாரிகளும் படையினரும் நானாதேசிவணிகரும் தொழில்வினைஞரும் அந்தணரும் வேறு பல சமூகப்பிரிவினரும் அங்கு வாழ்ந்தனர். ஆத்தகையோரின் வழிபாட்டுத் தேவைக்கேற்ப பல கோயில்கள் அமைக்கப்பட்டன. பதினாறுக்கும் மேற்பட்ட சைவஇ வைணவ ஆலயங்கள் பொலன்நறுவையில் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அவற்றுள் சில சோழராட்சிக்குரியவை ஏனையவை பிற்காலத்தவை.
தொல்லியல் வரலாற்றாய்வாளர்களால் இரண்டாம் சிவாலயம்இ ஐந்தாம் சிவாலயம்இ ஆறாம் சிவாலயம் என்று கூறப்பட்ட கட்டிடங்களில் சோழர் கால தொல்பொருட் சின்னங்கள் கிடைக்கின்றன. இரண்டாம் சிவாலயமான வானவன் மாதேவி ஈஸ்வரம் அழிவுறாது இன்றும் சீரான நிலையில் உள்ளது. இலங்கையில் இன்று வரை நிலைத்துள்ள கோயில்களில் இதுவே பழைமையானது. சோழர்க் கலைப்பாணியின் சிறந்த சிறந்த பண்புகளுக்கு கற்றளியான இரண்டாம் சிவாலயம் சிறந்த உதாரணமாகும். சுந்தர சோழனுடைய பட்டத்தரசியின் நினைவாக அதாவது இராஜராஜசோழனின் தாயின் நினைவாக இந்த ஆலயம் அமைக்கப்பட்டடிருக்கலாம். இக்கோயிலிலுள்ள அதிராஜேந்திரசோழனுடைய கல்வெட்டு சோழர்களின் கோயில் நிர்வாக முறையினை சிறப்பாக கூறுகிறது. பன்மாகேஸ்வரர் என்ற சிவனடியார் கூட்டம் பற்றி அதிலே குறிப்பிடப்படுகிறது. பதிபாலமூலப் பட்டுடைப் பஞ்சாசாரிய தேவகன்மிகள் என்ற குழுவினர் வானவன்மாதேவி ஈஸ்வரத்தில் இருந்தனர். கோயில் பணிகளை செய்கின்ற 'பரிசாரகர்' பணிமக்களும் கோயிலில் இருந்தனர். 'மாணிக்கம்' என்ற பட்டம் பெற்ற தேவரடியார்கள் பலரும் இருந்தனர். கங்கைகொண்ட சோழமாணிக்கம்இ தேவன் காமியான இராஜேந்திர சோழமாணிக்கம்இ தேவன் உய்யவந்தானான முடிகொண்ட சோழமாணிக்கம் முதலான தேவரடியாரை அங்குள்ள சாசனங்கள் குறிப்பிடுகின்றன.
பொலநறுவையில் சோழர் அமைத்த பிறகோயில்களின் பெயர்கள் தெரியவில்லை. அங்குள்ள ஐந்தாம் சிவாலயத்தின் அழிபாடுகளின் இடையே சோழாப்பிரதானிகளின் பெயர்களைக் குநிப்பிடும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அதன் மூலமாக அக்கோயில்கள் சோழராட்சிக்குரியது என்பது தெளிவாகிறது. இந்த ஐந்தாம் சிவாலயமே பொலனநறுவை இந்துக் கோயில்களில் மிகவும் பெரியதாகும். அதன் அழிபாடுகளிலும் சுற்றுப்புற அகழ்வாராச்சியின் போதும் கற்கலாலான எட்டுப் படிமங்களும் பத்தொன்பது வெண்கலப் படிமங்களும் கிடைத்துள்ளன. தட்சிணாமூர்த்திஇ கணேசர்இ விஸ்னுஇ காளிஇ நடராஜர் ஆகியோரின் படிமங்கள் அவற்றிடையே காணப்படுகிறது. இந்த சான்றுகளினூடாக சோழராட்சியில் இந்து சமயம் பெற்ற வளர்ச்சியை உணரலாம்.
இலங்கையின் வடகிழக்குப் பகுதியிலே திருகோணமலைஇ கந்தளாய்இ பதவியா என்பவற்றை உள்ளடக்கிய சோழரின் ஆட்சிப் பிரதேசங்களில் சோழரின் பெரும்பாலான சாசனங்களும் தொல்பொருள் சான்றுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றிலே சோழரின் கோயில் கட்டுமாணம்இ புனர்நிர்மாணம்இ சமயப்பணிகள் என்பவற்றைத் தெளிவாக அறியக்கூடியதாய் உள்ளது. இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினர் பதவியாவில் ஐந்து சிவாலயங்களின் அழிபாடுகளை அடையாளம் கண்டுள்ளனர். அவற்றிடையே சோழரின் ஐந்து கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. ஒரு கோயிலின் பெயர் இரவிகுலமாணிக்க ஈஸ்வரம் என்று சாசனம் கூறுயின்றது. இந்த ஆலயமானது இராஜராஜனது காலத்திலே பதவியிலிருந்த நானாதேசி வணிகராலும் நிர்வாக அதிகாரிகளினாலும் அமைக்கப்பட்டது என்பது அதன் அழிபாடுகளிடையே காணப்படும் சாசனங்களினால் உணரப்படுகிறது.
சோழ இலங்கேஸ்வரனின் ஆட்சியாண்டுகளில் திருகோணமலை மச்சகேஸ்வரத்து மூலஸ்தானமும்இ அதே இராஜேந்திர சோழ வளநாட்டிலுள்ள வேறொரு சிவாலயமும் தொடர்பாக சோழ மண்டலத்து இராஜேந்திர சோழ வளநாட்டுப் பிரதானிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பதிவு செய்வதாக மானாங்கேணிச் சாசனம் அமைந்திருக்கிறது. மச்சகேஸ்வரம் எனப்படுகின்ற திருக்கோணேஸ்வர மூலஸ்தானத்தை சோழர்கள் புனர்நிர்மாணம் செய்தனர். இந்த கோயிலுக்கு நாள் வழிபாட்டுத் தேவைக்காக நிலம் கொடுக்கப்பட்டதுடன் சோழராட்சியில் மச்சகேஸ்வரத்தில் சிறப்பாக பூசை விழாக்கள் நடைபெற்றன. இது தொடர்பான விரிவான விபரங்களை நிலாவெளிக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. எனவே சோழர்களுடைய சிறப்பான ஆட்சியிலே தென்னிந்தியாவில் மட்டுமன்றி ஈழத்திலும் இந்து சமயம் சார்ந்த ஆலயங்கள் வளர்ச்சிப் பெற்றமை சிறப்பானது.
தமிழக வரலாற்றில் வேறெந்த காலத்திலும் இல்லாதவாறு மிகச்சிறப்பான ஆட்சி விஸ்தரிப்பினையும்இ சமுதாய முன்னேற்றத்தையும்இ சமய வளர்ச்சியையும்இ கலைகட்டுமாணங்களையும் ஏற்படுத்திய பெருமை சோழர் காலத்தையே சாரும். இந்திய வரலாற்றில் எத்தனையோ மன்னர்கள் இடம்பிடித்திருக்கிறார்கள் ஆனால் அரச தர்மத்தின் வழி ஆட்சி செலுத்தி தாமும் வாழ்ந்து காட்டி மக்களை நல்வழிப்படுத்தி நாடும் வளர்த்து சமயத்தோடு கலை வளர்த்து நானிலம் போற்றும் உத்தமர்களாக தமிழக வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் சிறப்பிடம் பிடித்தவர்களாக சோழ மன்னர்கள் திகழ்கிறார்கள். இவர்களுடைய இலங்கை வருகையால் நம் இனத்தித் புகழ் சொல்லுகின்ற வரலாற்றுச் சான்றுகளும் இந்து சமயத்தின் புகழ் கூறும் கோயில்களும் அன்றும்இ இன்றும்இ என்றும் தமிழ் இனத்தின் புகழ் பரப்பும் சான்றுகளாய் வரலாற்றில் தடம் பதித்து விட்டதை யாராலும் மறுத்து விட முடியாது. இவற்றை அழியவிடாமலும் அழிக்கப்படாமலும் பாதுகாப்பது தமிழராகிய எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். அத்துடன் ஆராய்ச்சியின் மூலமாக புதிய விடையங்களை கண்டறிவதும் தமிழரின் தொன்மையையும் புகழையும் அனைவருக்கும் புரிய வைப்பதும் வரலாற்று மாணவர்களதும் வரலாற்றாசிரியர்களதும் பொறுப்பாகும்.