Friday, 6 January 2017

சாயல்குடி அருகே 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை

சாயல்குடி அருகே 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை:
 

சாயல்குடி அருகே 2,000 ஆண்டு களுக்கு முந்தைய இரும்பு உருக் காலையை தொல்லியல் துறையி னர் அகழாய்வு செய்து வரலாற்றை வெளிக்கொணர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாயல்குடியில் இருந்து சூரங்குடி செல்லும் பழைய மங்கம்மாள் சாலையில் தரைக்குடி அருகில் உள்ளது கொக்கரசன்கோட்டை. இந்த ஊரில் பச்சைத் தண்ணீர்க் காரி என்ற மாலைக்காரி அம்மன் கோயில் பல்லாங்குறிச்சி கண் மாய்க் கரையில் அமைந்துள்ளது.

இங்கு ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனர் வே.ராஜகுரு, ஒருங்கி ணைப்பாளர்கள் ஜெயசீலன், அற் புத ராஜ் ஆகியோர் மேற்பரப்பாய்வு செய்தனர். அப்போது 2,000 ஆண்டு கள் பழமையான சங்க காலத்தைச் சேர்ந்த சுடுமண்ணால் செய்யப்பட்ட இரும்பு உருக்காலையின் உடைந்த பகுதிகள், இரும்பு தாது, கழிவுப் பொருட்கள், கருப்பு, சிவப்பு, பழுப்பு நிற பானை ஓடுகள், குறியீடு உள்ள பானை ஓடு, சுடுமண்ணால் செய்யப்பட்ட தாய்த் தெய்வ உருவப் பொம்மை, கெண்டியின் நீர் ஊற்றும் மூக்குப்பகுதி ஆகிய வற்றை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து வே.ராஜகுரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கி.மு.1000 முதல் கி.மு.300 வரை யிலான பெருங்கற்காலத்தில்தான் மனிதன் இரும்பைக் கண்டுபிடித் தான். இதனால் இந்த பெருங் கற்காலத்தை இரும்புக்காலம் எனவும் அழைப்பார்கள். கொக்கர சன்கோட்டையில் இரும்பு தாதுப் பொருட்கள், இரும்புக் கழிவுகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட இரும்பு உருக்கு ஆலையின் உடைந்த பகுதிகள் கிடைத்துள்ளதால் இங்கு இரும்பு உருக்கும் தொழிற்சாலை இருந்திருப்பது உறுதியாகிறது. அக்காலத்து மக்கள் இரும்பு தாதுப் பொருட்களை உருக்காலைகள் மூலம் உருக்கி, அதில் இருந்து கத்தி, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங் களை உருவாக்கி உள்ளனர்.

இரும்புத் தாது இப்பகுதியில் அதிக அளவில் கிடைத்திருக்கலாம். மேலும் சங்ககாலப் பானை ஓடுகள் என அழைக்கப்படும் கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் இங்கு கிடைப்பதால் இரும்பு உருக்காலை சங்க காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

இரும்பை தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தி ருக்கிறார்கள். சங்க காலத்தில் இரும்புத் தொழில் சிறப்புற்று இருந்ததை அகநானூறு, புற நானூறு, பெரும்பாணாற்றுப்படை ஆகியவை தெரிவிக்கின்றன. இரும் புத் தாதுவில் இருந்து இரும்பை உருக்கி எடுக்கும் சுடுமண்ணால் செய்யப்பட்ட உலைக்களங்கள் நிலத்துக்கு மேல் உருவாக்கப்பட்டி ருக்கும். அத்தகைய இரும்பு உருக்கு ஆலையின் பகுதிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் கிடைப்பது இதுவே முதல்முறை.

தடித்த கருப்பு, சிவப்பு பானை ஓடு ஒன்றின் விளிம்புப் பகுதியில் தாமரைப்பூ போன்ற குறியீடு காணப்படுகிறது. மட்கலயங்களை வாங்கி பயன்படுத்தியவர்கள் தங்க ளது உடைமை எனக் குறிக்க குறி இடுவது உண்டு. இவற்றை உடைமைக் குறி என்பர். தற் காலத்திலும் பாத்திரங்களில் பெயர் பொறிக்கும் வழக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலை உடைந்த நிலையில் உள்ள சுடுமண்ணால் செய்யப்பட்ட அரைவட்ட வடிவத்தில் சிறிய அளவி லான பெண் உருவம் இங்கு கிடைத்துள்ளது. இது தாய் தெய்வ மாக இருக்கலாம். இவ்வுருவம் மேலாடையின்றி இடுப்பில் ஆடை அணிந்து கையை விரித்து அமர்ந்த நிலையில் உள்ளது. இத்தகைய சுடுமண் சிற்பங்கள் வீட்டு வழி பாட்டுக்கு பயன்படுத்தப்பட் டவையாக இருக்கலாம்.

சுடுமண்ணால் செய்யப்பட்ட கெண்டியின் நீர் ஊற்றும் மூக்குப் பகுதி இங்கு கிடைத்துள்ளது. இதன் தலைப்பகுதியில் தாமரை இதழ் போன்ற அமைப்புடன் நடுவில் துவாரமும் உள்ளது. இதை தயாரித்து சுடுவதற்கு முன் பானை அல்லது குடுவையின் உடல் பகுதியில் பொருத்தியுள்ளனர்.

பாண்டியர் ஆட்சிக்காலத்தில் அளற்று நாடு என அழைக்கப்பட்ட பகுதியில் இவ்வூர் இருந்துள்ளது. இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள திருமாலுகந்தான் கோட்டை யில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செஞ்சடைநாத ஈசுவரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 21 கல்வெட்டுக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்தால் இவ்வூரின் வரலாற்றை முழுமையாக வெளிக்கொணரலாம் என்றார்.

Keywords: சாயல்குடி, இரும்பு உருக்காலை, வரலாறு, வெளிக்கொணரல், அகழாய்வு, கோரிக்கை

அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்:

அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி
September 17, 2010
- ஆசிரியர் குழு

அயோத்தி ராமஜென்ம பூமி என்று அழைக்கப்படும் இடத்தில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டு, தன் அறிக்கையை நீதிமன்றத்துக்குச் சமர்ப்பித்துள்ளது. இவ்வறிக்கை ராமஜென்ம பூமியைப் பற்றி மட்டுமல்ல, இந்திய வரலாற்றுக்கே சிறந்த செய்திகளை அளித்துள்ளது.
இங்கு பூமியை அகழ்வதற்கு முன்பாக நவீன ரேடர் கருவிகளைக் கொண்டு பூமிக்கடியில் ஏதாவது கட்டடங்கள் புதைந்து கிடக்கின்றனவா என்று ஆய்ந்து பார்த்துள்ளனர். இந்த ஆய்வில் சில தூண்களின் பகுதிகளும், கட்டடப் பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. ரேடார் கருவியினால் காணப்பட்டவை உண்மையானவை தானா என்றும் மேலும் ஏதாவது உள்ளதா எனவும் பார்க்கத்தான் அகழாய்வு இங்கு மேற்கொள்ளப்பட்டது. அதன் அறிக்கைதான் இப்பொழுது சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. இவ்வறிக்கையின் சுருக்கம் வருமாறு.
மூவாயிரம் ஆண்டுகள்

பாபர் மசூதிப் பகுதியில் மிகவும் ஆழமான பகுதியில் எவ்வளவு காலம் மக்கள் வாழ்ந்து இருக்கின்றனர் என அறிய இயற்கையான பகுதி உள்ள வரையில் ஆழ்ந்து பார்த்துள்ளனர். அதன்படி இங்கு 3,000 ஆண்டுகளாக மனிதன் தொடர்ந்து வாழ்ந்துள்ளான் எனக் குறிக்கும் தடயங்கள் கிடைத்துள்ளன.
‘கார்பன் 12’ எனப்படும் விஞ்ஞான முறையில், கிடைத்த பொருட்களின் காலம் கணக்கிடப் பட்டுள்ளது. அக்கால மனிதன் பயன்படுத்திய பானை ஓடுகள், சுடுமண் பாவைகள், மணிகள் முதலியன கிடைத்துள்ளன. சுடுமண் பாவைகளில் தாய் முலை தழுவிய சேய்களின் உருவங்கள் உள்ளன.
இவற்றில் முக்கியமாக குறிப்பிடத்தகுந்தது ஒரு மோதிரமாகும். இதில் அசோகன் காலத்து பிராம்மி எழுத்து பொறிக்கப் பட்டுள்ளது. இங்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு மக்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்திருக்கின்றனர் என்னும் உண்மை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இதையடுத்து சுங்கர் என்னும் அரச வமிசத்தவர்கள் ஆண்ட காலத் தடயங்கள் கிடைத்துள்ளன. அக்காலத்தில் வழங்கிய சுடுமண் பாவைகள், விலங்குகளின் உருவங்கள், பானை ஓடுகள் முதலியன கிடைத்துள்ளன. சுமார் இருநூறு ஆண்டுகள் சுங்கர் காலச் சான்றுகள் கிடைக்கின்றன.
சுங்கர் காலத்துக்குப்பின் இங்கு குஷானர் காலப் பொருள்கள் கிடைத்துள்ளன. 300 ஆண்டுகள் இப்பண்பாடு நிலவிய சான்றுகள் இங்கு உள்ளன. அதாவது கிறிஸ்தவ சகாப்தம் தொடங்கி, முதல் மூன்று நூற்றாண்டுகள் இங்கு இந்தப் பண்பாடு நிலவியது. இதை மூன்றாவது காலகட்டம் என்று கூறலாம்.
இதில் பெரிய செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட சுவரின் அடிப்பகுதி ஒன்றும் கிடைத்துள்ளது. ஏழு அடுக்குகள் வரை இச்சுவரின் செங்கல் வரிசை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய கட்டடப் பகுதியாகும்.
குப்தர் காலம்

இதையடுத்து குப்தர் காலச் சின்னங்கள் இங்கு தொடர்ந்து கிடைக்கின்றன. இவை சுமார் 300 ஆண்டுகள் அதாவது கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரை வழங்கிய பொருட்கள் ஆகும். இங்கு கிடைத்தவற்றில் சந்திரகுப்த அரசன் வெளியிட்ட செப்புக்காசு ஒன்று உள்ளது. இதில் ‘ஸ்ரீ சந்திர’ என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
குப்தர்களுக்குப் பின் ஆண்ட ராஜபுத்திரர்கள் காலம் வரை அடுத்த கட்டம் எனலாம். சுமார் 400 ஆண்டுகள் வரை நிலவிய, அதாவது கி.பி. 600 முதல் கி.பி. 1000 வரையில் மக்கள் வாழ்ந்த பகுதிகளும் கிடைத்துள்ளன.
இக்காலத்தைச் சார்ந்த வட்ட வடிவமான ஒரு கட்டடம் இங்கு கிடைத்துள்ளது. இது ஒரு கோயிலின் வடிவமாகவே  காணப்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. செங்கற்களால் கட்டப்பட்ட சுவரில் வடபுறத்தில் அபிஷேக நீர் வழிந்தோட கோயில்களில் அமைக்கப் படும் பிரனாளம் என்னும் பகுதியும் தெளிவாக அடையாளம் காணப் பட்டுள்ளது.
இது ஒரு மாபெரும் கட்டடமாக மண்டபம் போல் காணப்படுகிறது. இரு அங்கணமாக  எழுப்பப்பட்டுள்ளது. முன்பிருந்த கட்டடத்தின் மேலேயே இந்தக் கட்டடமும் எழுப்பப்பட்டுள்ளது. இக்கட்டடம் வெகு காலம் பயன்பாட்டில் இருந்துள்ளது. இது 150 அடி நீளமும் 100 அடி அகலமுமாக கட்டப்பட்டுள்ளது.
இப்பெரும் கட்டடத்தின் மேல் தான் பிற்காலத்தில் பாபர் மசூதி எழுப்பப் பட்டிருக்கிறது. பாபர் மசூதியின் நேர் கீழே தான் தெற்கு வடக்காகவும்,  கிழக்கு மேற்காகவும் இப்பெரும் கட்டடச் சுவர்கள் காணப்படுகின்றன. இம்மண்டபப் பகுதியில் சீராக அமைக்கப்பட்ட ஐம்பது தூண்களின் அடிப்பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை செங்கல் தூண்களைப் பாவி திமிசு அடித்தும் அதன் மேல் மணற்கற்களை அடுக்கியும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தூண்கள் எந்த அமைப்பில் இக்கட்டடம் இருந்தது என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. இக்கட்டடச் சுவர்களின் பகுதிகள் 150 அடி நீளத்திற்கு இன்னமும் எஞ்சியுள்ளன.
இக்கட்டடத்தின் நேர்மையத்தின் மேல்தான் பாபர் மசூதியை எழுப்பியுள்ளனர். இதன் கிழக்கில் செங்கல் பாவிய தரையில் வட்ட வடிவில் குடையப்பட்டுள்ளது. இங்கு ஏதோ முக்கியமான பொருள் பொருத்தி வைத்திருந்தனர் என